இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயார்: நரேந்திர மோடி
இந்தியப் பொதுத் தேர்தலில் தமது கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) தெரிவித்துள்ளார்.
தனது வெற்றியைத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா(Sarath Fonseka) ஆகியோருக்கு நன்றிகளையும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து 'எக்ஸ்' தளம் ஊடாக அனுப்பிய செய்திக்கு பதிலளித்த மோடி, “இந்தியா - இலங்கை பொருளாதார கூட்டுறவில் எங்களது தொடர்ச்சியான ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை ஆராய்கிறது உண்மையின் அலசல் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |