கூட்டமைப்பை மீட்டெடுக்க எத்தகைய விட்டுக் கொடுப்புக்கும் தயார்: சிறீதரன் உறுதி

Sri Lankan Tamils S. Sritharan Tamil National Alliance
By Rakesh Jan 26, 2024 01:29 AM GMT
Report

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு எத்தனை விட்டுக் கொடுப்புகளையும் தியாகங்களையும் செய்யத் தயாராக உள்ளேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தேசத்தைச் சேர்ந்த பிரபல ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சியின் முக்கிய பலம் தமிழ்த் தேசியம். அது மாவீரர்களின் கல்லறையிலிருந்தே தொடங்க வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கும் தேர்தல்

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கும் தேர்தல்

தியாகங்களை செய்ய தயார்

இதன் காரணமாக, தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளேன்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த தமிழ்த் தேசிய சக்திகளின் அணிகள் அனைத்தையும் ஒன்றிணைப்பேன்.

கூட்டமைப்பை மீட்டெடுக்க எத்தகைய விட்டுக் கொடுப்புக்கும் தயார்: சிறீதரன் உறுதி | Ready To Make Any Sacrifices Sridharan Assured

மேலும், தலைமை என்ற எதிர்பார்ப்பின்றி அனைவரையும் ஒன்றிணைக்க என்னால் முடிந்த இயன்ற முயற்சிகளை மேற்கொள்வேன். இதற்காக எத்தனை விட்டுக் கொடுப்புகளையும் தியாகங்களைம் செய்ய நான் தயாராக இருக்கின்றேன்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பயணத்தை நோக்கி அனைவரையும் அரவணைத்து தியாக உணர்வோடு உழைக்க வேண்டும்.

13ஆம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடையாது. ஒற்றையாட்சிக்குள் எட்டப்படும் தீர்வு எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றாது.

புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை

13 இல் உள்ள பல விதிகளை இலங்கை அரசு மாற்றியுள்ளது. அத்தோடு, 13இன் மூலமாகத் தீர்வை எட்ட முடியும் என்றும் நாம் யாரும் நினைக்கவில்லை.

தமிழரின் நிலம், மொழி, கலாசார அடையாளங்கள் அங்கீகரிக்கப்பட்ட வடக்கு - கிழக்கில் இணைந்த ஒரு தீர்வை நோக்கியே நாம் பயணிக்கின்றோம்.

கூட்டமைப்பை மீட்டெடுக்க எத்தகைய விட்டுக் கொடுப்புக்கும் தயார்: சிறீதரன் உறுதி | Ready To Make Any Sacrifices Sridharan Assured

எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீக மக்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும். தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக்குழு என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

எங்கள் பயணம் இந்தத் திசையிலயே அமைகின்றது. அதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்று நம்புகின்றோம். மற்றக் கட்சிகளுடன் இணைந்து பொதுவான ஒரு தளத்தில் பயணிக்கவும் பொதுவான அரசியல் கொள்கையை உருவாக்கவும் வழியேற்படுத்துவேன்.

முன்னதாக, வடக்கு, கிழக்கில் உள்ள சிவில் சமூக மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து அவர்களுடன் வெளிப்படையான ஜனநாயக உரையாடலை நடத்துவதுடன், புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்புகளுடனும் பேச்சுகளை நடத்துவேன்” என கூறியுள்ளார். 

சுமந்திரனால் சர்வதேசத்திற்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்து

சுமந்திரனால் சர்வதேசத்திற்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்து

சிறீதரனுக்கு மன்னாரில் வரவேற்பு நிகழ்வு

சிறீதரனுக்கு மன்னாரில் வரவேற்பு நிகழ்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US