சிறீதரனுக்கு மன்னாரில் வரவேற்பு நிகழ்வு
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை வரவேற்கும் முகமாக மன்னாரில் வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த வரவேற்பு நிகழ்வானது, நேற்றைய தினம் (25.01.2024) மாலை 4.30 மணியளவில் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மன்னாரை வந்தடைந்த சிவஞானம் சிறீதரன், மன்னார் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
மோட்டார் சைக்கிள் பவனி
இதனை தொடர்ந்து, அவர், மன்னார் ஆத்தூர் பிரதான வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளைக்கு மோட்டார் சைக்கிள் பவனியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன், பா.அரியநேந்திரன், சிறீநேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri