சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ரணிலிடம் ஒப்படைக்க தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Dr Wijeyadasa Rajapakshe Maithripala Sirisena Ranil Wickremesinghe Dayasiri Jayasekara Sri Lanka Presidential Election 2024
By Dharu Jul 27, 2024 08:04 AM GMT
Report

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஒரு குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஏலம் விட திட்டமிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்..

இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

விஜயதாச ராஜபக்ச தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

விஜயதாச ராஜபக்ச சுதந்திரக்கட்சி உறுப்பினர்தான், அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கின்றேன்.நாட்டுக்காக துணிந்து செயற்படும் அரசியல்வாதியே அவர்”  எனவும் மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள பகிரங்க சவால்

ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள பகிரங்க சவால்

தயாசிறி ஜயசேகர

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்த கருத்தை நான் கண்டித்து முற்றாக நிராகரிக்கின்றேன்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைக்கு தாம் மட்டுமே பொறுப்பு என தயாசிறி ஜயசேகர கூறியிருப்பது முற்றிலும் பொய்யானது.

நான் அதை விரிவாக விவரிக்க விரும்பவில்லை.  ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அல்ல என்றும், அவரை எமது கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் தவரானவை.

 விஜயதாச ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியலில் பிரவேசித்ததுடன், 2006-2007 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் அரசாங்கத்தின் பாரிய மோசடி, ஊழல் மற்றும் பொது நிதி ஊழலை எதிர்த்ததன் காரணமாகவே அவர் வெளியேற்றப்பட்டதை நினைவுகூர விரும்புகின்றேன்.

மகிந்தவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட மொட்டு எம்.பிக்கள்

மகிந்தவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட மொட்டு எம்.பிக்கள்

நீதிக்காக நிற்கும் அரசியல்

விஜயதாச தனது தனிப்பட்ட அரசியல் இலாபங்களை எப்பொழுதும் ஒதுக்கி வைத்துவிட்டு நியாயம் மற்றும் நீதிக்காக நிற்கும் மூத்த அரசியல்வாதி.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஒருசில சந்தர்ப்பவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்திற்கு எதிராக அவர்,  உண்மையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உறுதிசெய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

விஜயதாச ராஜபக்சவை நிறைவேற்று சபையினால் எமது கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே அவருக்கு கட்சி உறுப்புரிமை அரசியலமைப்பு ரீதியில் வழங்கப்பட்டிருந்தது என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர, சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு வாழ முடியாது எனவும், எனவே யாராவது ஒரு வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதன்படி, அவர் எதற்காகத் தயாராகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்த தயாராகும் ஆணைக்குழு

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்த தயாராகும் ஆணைக்குழு

சுதந்திரக் கட்சி

ஒரு குழுவினர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஏலம் விட முயல்வதும், மற்றொரு குழுவினர் தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காகவே எமது கட்சியை மக்கள் சக்தியின் ஒற்றுமைக்கு காட்டிக் கொடுப்பதற்கும் செயற்படுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது.

எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கோ நான் ஆதரவு வழங்கமாட்டேன்

தயாசிறி ஜயசேகர மற்றும் பலர் ஏற்கனவே ஆகஸ்ட் 8 ஆம் திகதி சஜித் தரப்புடன் இணைந்து கொள்ள இணங்கியுள்ளனர்.

முடிந்தால் இது தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை வெளியிடுமாறு நான் அவருக்கு சவால் விடுகின்றேன்.

தற்போதைய சமூக அரசியல் பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு மிகவும் பொருத்தமான நபரான விஜயதாச, வெற்றி வேட்பாளராக பல்வேறு நபர்கள் ஊடகங்கள் ஊடாக வெளியிடும் பொய்யான சந்தர்ப்பவாத அறிக்கைகளுக்கு ஏமாந்து செயற்பட வேண்டாம் என தெரிவித்துக்கொள்கின்றேன்” என கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் சரத் கீர்த்திரட்ன

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் சரத் கீர்த்திரட்ன

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US