ரவி செனவிரத்ன மீதான வழக்கு தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பம்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன முன்னைய அரசாங்கத்தில் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட வழக்கு தொடர்பில் மீள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 28ம் திகதி ரவி செனவிரத்ன பயணித்த வாகனம், வௌ்ளவத்தைப் பிரதேசத்தில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டி மற்றும் இன்னொரு வாகனம் மீது மோதி சேதம் ஏற்படுத்தி இருந்தது
அநுரகுமார அரசாங்கம்
அந்தச் சந்தர்ப்பத்தில் ரவி செனவிரத்ன குடிபோதையில் இருந்தமை விசாரணைகளில் தெரிய வந்தது.
அதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டார்.
பிணையில் வெளிந்த உடன் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து செயற்பட்ட அவருக்கு அநுரகுமார அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர்
இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கில் பொலிஸ் பிணையில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரான ரவி செனவிரத்னவை விடுதலை செய்திருக்க முடியும்.
எனினும், கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் மற்றும் அன்றைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் அழுத்தம் காரணமாகவே ரவி செனவிரத்ன நீதிமன்றத்தில் நிறுத்தபபட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்பின்பேரில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் மீள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
