ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலைக்கு 02.01.2026நேற்று களவிஜயமொன்றினை மேற்கொண்டிருந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வைத்தியசாலை வளப்பற்றாக்குறைகள் குறித்து ஆராய்தார்.
ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறைகளைத் தீர்க்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
களவிஜயம்
அந்தவகையில் வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர், வளப்பற்றாக்குறைகளினால் நோயாளிகளும், வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் எதிர்நோக்குகின்ற பாதிப்பு நிலமைகள் தொடர்பிலும் நேரடியாகப் பார்வையிட்டிருந்தார்.

குறிப்பாக ஒட்டுசுட்டான் பிரதேசவைத்தியசாலைக்கு மருந்துக்கலவையாளர்கள் தேவை, இரத்தப் பரிசோதகர் தேவை, சுகாதாரப்பணி உதவியாளர்கள் தேவை, வைத்தியர்களின் எண்ணிக்கையை மூன்றாக அதிகரித்தல், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு புதிய கட்டடம் தேவை, சிறிய அறுவைச் சிகிச்சைக்கான கட்டுமானத் தேவை, நுழைவாயில் பாதுகாவலர்களுக்கான கட்டடம் தேவை, கழிவகற்றல் வாய்க்கால் சீரமைப்பு, சுத்தமான குடிநீர் தேவை, வைத்தியசாலைக்கான வேலி அமைத்தல், மலசலகூடங்களின் சீரமைப்புகமகள், மின்சார் இணைப்புகளைத் திருத்தம் செய்தல், வைத்தியசாலைக் கடடத்திற்கு வர்ணம்பூசுதல், அவசர மருந்துகள் வைக்கும் தள்ளுவண்டித் தேவை, இதய அதிர்வுக்கருவி (Defibrillator)தேவை, பல்லளவு கண்காணிப்புக் கருவி (Multipara Monitor)தேவை, அவசரப் பிரிவிற்கு மருந்துகள் தேவை உள்ளிட்ட தேவைப்பாடுகள், வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் இதன்போது வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்படது.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் உரிய வகையில் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார்.









உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri