ரவி கருணாநாயக்கவுக்கு ஐ.தே.கட்சியில் முக்கிய பதவி
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைய இந்த கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளராக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் கட்சியின் முக்கிய பதவிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பாலித ரங்கே பண்டார தற்போது பதவி வகித்து வருவதுடன் அதன் தேசிய அமைப்பாளராக சாகல ரத்நாயக்க கடமையாற்றி வருகிறார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)