கெஹலிய வீட்டு முன்வைக்கப்பட்ட மலர்வளையம்: பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டிற்கு முன்பு மலர்வளையம் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று துரித நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணை
இதன்போது, பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்து, இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சியைப் பார்வையிட்ட பின்னர், வழக்கைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து பொலிஸாரால் தீர்மானிக்க முடியும் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)