கொழும்பில் பதற்றம்! குடு கண்ணாவின் கும்பலில் ஒருவர் பலி
கொட்டாஞ்சேனையில் உள்ள பெனடிக்ட் மாவத்தையில் இன்று(10.02.2025) மாலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள இரண்டு குற்றக் கும்பல்களுக்கிடையில் நிலவி வந்த தகராறின் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் T - 56 ரக துப்பாக்கியைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 43 வயதுடைய நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த நபர் குடு கண்ணா என அழைக்கப்படும் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்பவரின் சீடர் ஆவார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam