சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
கிளிநொச்சி (Kilinochchi) - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தரையாற்றுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களும் 45 போத்தல் கசிப்பு, 233 போத்தல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
விளக்கமறியல்
அத்துடன் நான்கு சந்தேக நபர்களையும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பொழுது எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ,இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
