டொனால்ட் ட்ரம்புக்கு அதிகரிக்கும் அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள்

Donald Trump Iran
By Kamal Mar 07, 2026 05:34 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட ஈரான் எதிர்ப்பு போர் ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியம் கடும் பதற்றத்தில் தள்ளப்பட்டுள்ளது.

இந்த போரில் கிடைத்த இராணுவ வெற்றிகளை தெளிவான அரசியல் அல்லது புவியியல் அரசியல் வெற்றியாக மாற்ற முடியுமா என்ற கேள்வி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன் எழுந்துள்ளது.

போரின் ஆரம்பத்தில் ஈரானின் உச்ச தலைவர் அலி கொமெய்னி கொல்லப்பட்டதாகவும், நிலம், கடல் மற்றும் வான்வழி நடவடிக்கைகளில் ஈரான் இராணுவத்திற்கு கடுமையான இழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டாலும், இந்த மோதல் விரைவில் பிராந்திய அளவிலான போருக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்புக்கு அதிகரிக்கும் அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் | One Week Into Iran War Dangers Us Trump

இதனால் அமெரிக்கா நீண்டகால இராணுவ ஈடுபாட்டில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாகவும், அதன் விளைவுகள் டிரம்பின் கட்டுப்பாட்டை மீறக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானுடன் நடைபெறும் போர் மிகவும் சிக்கலானதும் நீண்டகாலம் நீடிக்கக்கூடிய இராணுவ நடவடிக்கையாகும் என வாஷிங்டனில் அமைந்துள்ள ஜோன் ஹோப்கின்ஸ் சர்வதேச கற்கை ஆய்வு மையத்தைச் சேர்ந்த லோரா ப்ளூமென்பெல்ட் தெரிவித்துள்ளார்.

இது உலக பொருளாதாரத்தையும் பிராந்திய நிலைத்தன்மையையும், மேலும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் டிரம்பின் குடியரசுக் கட்சியின் நிலைப்பாட்டையும் பாதிக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவை தேவையற்ற போர்களில் ஈடுபடுத்தமாட்டேன் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த டிரம்ப், தற்போது அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத நிலையிலும் திறந்த முடிவில்லாத போரை முன்னெடுத்து வருகிறார் என பல நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

“எபிக் ஃப்யூரி” நடவடிக்கை

ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த இராணுவ நடவடிக்கை ஒபரேஷன் எபிக் பியுரி “Operation Epic Fury” என அழைக்கப்படுகிறது.

இது 2003ல் ஈராக் மீதான படையெடுப்பிற்கு பின்னர் அமெரிக்கா மேற்கொண்ட மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த நடவடிக்கையின் இறுதி இலக்கு என்ன என்பது குறித்து தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் வெள்ளை மாளிகை பேச்சாளர் அனா கெல்லி, அமெரிக்காவின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன எனக் கூறியுள்ளார். ஈரானின் ஏவுகணை திறனை அழித்தல், அதன் கடற்படையை பலவீனப்படுத்தல், அதன் கூட்டணி ஆயுத ஆதரவை நிறுத்துதல் மற்றும் ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுத்தல் என்பவையே முக்கிய இலக்குகள் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உள்நாட்டு அரசியலிலும் தாக்கம்

போர் நீடித்து அமெரிக்க படைவீரர் உயிரிழப்புகள் அதிகரித்தால் அல்லது வளைகுடா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு பொருளாதாரச் செலவுகள் உயர்ந்தால், அது டிரம்பின் வெளிநாட்டு கொள்கையில் மிகப்பெரிய அரசியல் சூதாட்டமாக மாறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

இதுவரை டிரம்பின் Make America Great Again (MAGA) இயக்க ஆதரவாளர்கள் பெரும்பாலும் அவருக்கு ஆதரவாக இருந்தாலும், அந்த ஆதரவு குறைந்தால் நவம்பரில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியின் நிலை பாதிக்கப்படலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

போர் மேலும் விரிவடையும் அபாயம்

ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதல்கள் காரணமாக பிராந்திய பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்பு மீண்டும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடங்கியதால் போர் மேலும் ஒரு நாட்டிற்கு பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உலக பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய முக்கிய கவலை ஒன்றாக ஹோர்மூஸ் ஜலசந்தி குறித்த அச்சம் உள்ளது. உலகின் மொத்த எண்ணெய் போக்குவரத்தின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி இந்த நீரிணை வழியாகச் செல்கிறது.

இந்த நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் உலகளாவிய பொருளாதாரத்துக்கு கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

போரின் காலம் எவ்வளவு நீடிக்கும் என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், இந்த மோதல் மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US