தேர்தல் முறையை மாற்ற துடிக்கும் அரசாங்கம்: சவால் விட்ட ஹக்கீம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் முறைமை மாற்றத்தை அதாவது, விகிதாசார முறைமையில் கைவைக்க முயற்சிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா இன்று(20.09.2025) காலை 9.00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள மோனார்க் இம்பீரியல் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடரந்துரையாற்றிய அவர்,
“பல அரசாங்கங்கள் அருதி பெரும்பான்மை கிடைத்தவுடன் அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொண்ட போது செயற்படும் விதங்களை நாம் பார்த்துள்ளோம்.
விகிதாசார தேர்தல் முறை
தேர்தல் முறைமைகளில் ஸ்தீரமான ஆட்சி தேவை என குறிப்பிட்டுக் கொள்ளும், ஆட்சியமைத்துள்ள, ஆட்சியமைக்க காத்திருக்கும் கட்சிகள் எதிர்க்கட்சிக்கு வரும் போது உங்களுக்கு என்ன நடக்கும் என நினைத்து பாருங்கள்.
அதனால் இன்று வரை விகிதாசார தேர்தல் முறைமை தேவை என போராடி வருகின்றேன். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருக்கும் போது கொண்டுவந்த மாகாண சபை முறை மாற்றத்திற்கான தீர்மானத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் எமக்கு 12 வருடங்களாக மாகாண சபை இல்லை.
ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வந்த விகிதாசார தேர்தல் முறையிலேயே சிறிய கட்சிகள் பேசப்பட்டது. குறித்த விகிதாாசார முறையிலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. அதை மறந்து விட வேண்டாம்.
எமக்கு முன்னிருக்கும் விசாலமான சவால் என்வென்றால், தேர்தல் முறைமைகளில் தேவையற்ற மாற்றம் கொண்டு வந்து சிறிய கட்சிகளை முடக்க நினைக்கும் ஆட்சியை கைப்பற்ற காத்திருக்கும் கட்சிகள் மற்றும் அரசாங்கம் அதன் பிரதிபலனை அனுபவிக்க வேண்டிவரும்.
ஆதலால் இந்த அரசாங்கத்தின் ஏகாதிபத்திவாதத்தை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



