மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நசியுண்டு பரிதாபப் பலி!
இரத்தினபுரி - பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலமுர - பலாங்கொடை வீதியின் கிரிமினகோட பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பின்னோக்கிச் சென்றபோது மோட்டார் சைக்கிளுடன் மோதிய விபத்தில் அதன் ஓட்டுநர் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு பேருந்துக்கு வழிவிடுவதற்காக இந்தத் தனியார் பேருந்து பின்னோக்கி நகர்த்தப்பட்ட போதே இந்தத் சோக விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவர் பலாங்கொடை, மஹவலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்துடன் தொடர்புடைய தனியார் பேருந்தின் சாரதி உடனடியாகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.