புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் ரதன தேரர்
புதிய தரப்புகளுடன் இணைந்து கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சியில் அதுரலிய ரதன தேரர் (Athuraliye Rathana Tero) ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமல் வீரவன்ச(Wimal Weerawansa), திலித் ஜயவீர மற்றும் தென்னிலங்கை தேசியவாதிகளின் பங்கேற்புடன் அமைக்கப்பட்டுள்ள சர்வஜன அதிகாரம் என்னும் அரசியல் கூட்டணியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கூட்டணி
மேலும், அவரை கூட்டணியில் இணைக்கக்கூடாது சர்வஜன அதிகாரம் அரசியல் கூட்டணியின் சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இவ்வாறு ஓரங்கட்டப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
இந்நிலையிலேயே, புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் ரதன தேரர் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |