மொட்டு சார்பில் பசில் களமிறக்கப்பட வேண்டும்: ரஞ்சித் பண்டார எம்.பி கோரிக்கை
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(Sri Lanka Podujana Peramuna) கட்சியின் சார்பில் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) களமிறக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் பண்டார (Ranjith Bandara)கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவித்ததாவது, "பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளன.
அவர் இந்நாட்டில் வேலை செய்து காட்டியவர், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பசிலைப் பற்றி கேளுங்கள். அவர் ஜனாதிபதிப் பதவிக்கு வருவதில் உள்ள தவறு என்ன?
வேலை செய்து காட்டிய தலைவருக்குப் பதவி வழங்கப்படுவதே மிக பொருத்தம். அதற்கான தகுதியான நபரே பசில் ராஜபக்ச.
அதேவேளை, நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) சிறந்த இளம் தலைவர். அவர் மொட்டுக் கட்சியை பலப்படுத்திவிடுவார் என்ற அச்சம் காரணமாகவே நாமலுக்கு எதிராகப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 8 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
