ரஞ்சன் ராமநாயக்கவை சிறைக்கு சென்று பார்வையிட்டுள்ள நாமல் - அரசியல் பார்வை தொகுப்பு
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ஷ, அங்கு ரஞ்சன் ராமநாயக்கவிடம் குறைகளை கேட்டு அறிந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடல் சுமார் அரை மணி நேரம் நீடித்ததாகவும் கூறப்படுகின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
இவ்வாரம் இடம்பிடித்த இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது அரசியல் பார்வை தொகுப்பு,