ரணிலின் குடியுரிமையை ரத்து செய்ய முடியுமா..!
படலந்த விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் குடியுரிமையை ரத்து செய்ய முடியாது என மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் சட்டத்தரணி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
படலந்த விசாரணைக் குழு 1948 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க விசாரணைக் குழு சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதால், இது எந்தவொரு நபரின் சிவில் அல்லது குடியுரிமை ரத்து செய்ய அதிகாரமுடையதல்ல என பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
சட்டத்தின்படி, ஒரு நபரின் சிவில் அல்லது குடியுரிமை ரத்து செய்ய முடியும் என்பது 1978 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் விசாரணைக் குழுக்களுக்கு மட்டுமே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரை
1978 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க சிறப்பு ஜனாதிபதி விசாரணைக் குழு சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பாராளுமன்றத்தில் வாக்களிப்பு நடத்தி, தொடர்புடைய நபர்களின் சிவில் அல்லது குடியுரிமை நீக்க முடியும் எனவும் அவர் விளக்கியுள்ளர்ர்.
எனினும், படலந்த விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் மக்களின் வாழ்க்கை உரிமை, சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாக சில சிறப்பான மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செய்யக்கூடியதாக இருக்கலாம் என் தெரிவித்துள்ளார்.
போதுமான சான்றுகள் இருந்தால், குற்றவியல் வழக்குகளை தொடர சட்டமா அதிபருக்கு அதிகாரம் உள்ளதையும் மஹாநாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
