உதவிக்கு உடனடியாக அழைக்கவும்! இன்று பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Sri Lankan Schools
By Chandramathi Mar 17, 2025 01:13 AM GMT
Report

காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய அனர்த்தம் காரணமாக மாணவர் ஒருவருக்கு பரீட்சை எழுத முடியாவிட்டால், அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர தொலைபேசி எண்

இதன்படி அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அவசர தொலைபேசி எண் 117 அல்லது அனர்த்த முகாமைத்துவ மையத்தின் சிறப்பு கூட்டு அவசர நடவடிக்கை அறை எண்கள் 0113 668 020/ 0113 668 100/ 0113 668 013/ 0113 668 010 மற்றும் 076 3 117 117 என்ற எண்களில் அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவிக்கு உடனடியாக அழைக்கவும்! இன்று பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Weather Conditions During The O L Exam Today

மேலும், பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 ஐத் தொடர்பு கொண்டு, தடைகளை விரைவில் அகற்றுவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைகள் நடைபெறும் காலகட்டத்தில் எதிர்பாராத வானிலை காரணமாக ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்த்து, பரீட்சையை நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ மையமும் பரீட்சைத் திணைக்களமும் விசேட கூட்டுத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.

இடையூறுகள்

அதன்படி, இந்த ஆண்டு பரீட்சைக் காலத்தில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும், பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கும் ஏற்படக்கூடிய இடையூறுகளையும் தவிர்க்க, அவசரகால பதில் ஒருங்கிணைப்பு பொறிமுறையை வலுப்படுத்த அனைத்து பங்குதாரர்களும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளை இந்தக் கூட்டுத் திட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

உதவிக்கு உடனடியாக அழைக்கவும்! இன்று பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Weather Conditions During The O L Exam Today

மேலும் பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய ஏதேனும் இடையூறுகளை நிர்வகிக்க, பரீட்சைத் திணைக்களம், முப்படைகள், பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள பிற அமைப்பினருடன் ஒருங்கிணைந்து, அனர்த்த முகாமைத்துவ மையம் ஏற்கனவே தொடர்புடைய திணைக்களத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று(17.03.2025) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   

மாணவர்களின் கவனத்திற்கு! பரீட்சை நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்

மாணவர்களின் கவனத்திற்கு! பரீட்சை நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்

க.பொ.த சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

க.பொ.த சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US