எதிர்க்கட்சிகள் மீது கடும் கோபத்தில் ரணில்! பகிரங்கமாக வெளியிட்டுள்ள தகவல்
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் எம்முடன் கைகோர்க்க வேண்டும். இல்லையேல் தங்களின் பாதையில் செல்ல வேண்டும். அதைவிடுத்து மக்களை பகடைக்காய்கள் ஆக்கக்கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துரைக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "மக்களை ஏறி மிதிக்கின்ற எந்தத் திட்டங்களையும் சட்டங்களையும் நாம் முன்னெடுக்க மாட்டோம். நாட்டின் நலன் கருதியும் நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதியுமே திட்டங்களை நாம் முன்னெடுக்கிறோம்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு
எனவே எமது ஆட்சியில் எந்தச் சட்டமும் மக்களுக்கு பாதகமாக அமையாது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிடுகின்றன.
இதேவேளை, எதிர்க்கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிக்காக மக்கள் மத்தியில் பொய் பிரசாரத்தை முன்னெடுக்கின்றது. நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமெனில் எதிர்க்கட்சியினர் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.

இல்லையேல், தங்கள் பாதையில் செல்ல வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதைவிடுத்து மக்களை பகடைக்காய்கள் ஆக்கக்கூடாது." என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri