கொழும்பில் வெளிநாட்டு பெண்களுடன் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி! உரிமையாளர் தப்பியோட்டம்
குருந்துவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மசாஜ் நிலையப் போர்வையில் சட்டவிரோதமாக செயற்பட்ட 11 தாய்லாந்து பெண்களை கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன், விடுதியின் உரிமையாளர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட தாய்லாந்து பெண்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 தாய்லாந்து பெண்கள் கைது
குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதிக்குக் கிடைத்த விசேட தகவல் ஒன்றின் அடிப்படையில், உத்தியோகத்தர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன நடவடிக்கையின் பின்னரே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மாத காலம் மாத்திரம் விசா பெற்று இலங்கைக்கு வந்துள்ள இந்த பெண்கள், குறித்த மசாஜ் நிலையத்தில் தங்கியிருந்து சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மாதந்தோறும் இலட்சக்கணக்கில் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்காக பெண் ஒருவரிடம் இருந்து 20,000 முதல் 30,000 ரூபா வரை அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 11 தாய்லாந்து பெண்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri