சஜித் தரப்புக்கு காலக்கெடு விதித்துள்ள ரணில் தரப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு இணைந்து போட்டியிடுவது குறித்த தனது முடிவை தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சக்திக்கு கால அவகாசம் அளித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) போட்டியிடுவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே நடந்த கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காலக்கெடு
அத்துடன், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் கூட்டணியை விரிவுபடுத்த விரும்பினால், காலக்கெடுவிற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி வெளியிடலாம் என்றும் ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையில், அரசாங்க கட்சியான, தேசிய மக்கள் சக்தி, ஏற்கனவே கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்கான தனது வைப்புத் தொகையை செலுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
