தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் கிராம சேவகர்கள்
பெண் கிராம சேவையாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக நாளை நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரவு நேரத்தில் ஏற்படுகின்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்களுடன் தொடர்புடைய கடமைகளிலிருந்து விலகுவதாக அறிவித்து , பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

முன்னாள் இராணுவ வீரரிடம் பெண் மருத்துவரின் மோசமான புகைப்படங்கள்: 72 மணித்தியாலங்களில் நடந்தது என்ன..!
பாதுகாப்பு
பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் உள்ள அலுவலகங்களை மூடுதல், ஒருவரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட இடத்திலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வது மற்றும் நண்பகல் 1 மணிவரை மட்டுமே அலுவலகத்தில் சேவையில் ஈடுபடுவது போன்ற நோக்கங்களை கொண்டு இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்விடயங்கள் தொடர்பாக தீர்வுகள் கிடைக்கும் வரை தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
