உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறாது- ரணில் விக்ரமசிங்க
எதிர்வரும் தேர்தலில் பெரும்பாலான உள்ளூராட்சி அமைப்புகளில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பேசிய விக்ரமசிங்க, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெறாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு வாய்ப்பு
எனவே, தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க மற்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் திறன்கள் குறித்து வாக்காளர்கள் இப்போது நல்ல புரிதலைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
முந்தைய இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அதே குழுவிற்கு 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர்கள் மற்றொரு வாய்ப்பை வழங்கத் தயாரா என்றும் ரணில் கேள்வி எழுப்பியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
