ரணில் - சஜித் இணைவு உறுதி! ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த இணைவானது அநுர அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அச்சம்
கொழும்பில் நேற்று(28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்களின் கோரிக்கைக்கமையவே இணைந்து செயற்பட இரு தரப்பினரும் இணக்கத்துக்கு வந்துள்ளனர்.மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் எமது பலம் தெரியவரும்." என்றார்.
இரு தரப்பு இணைவு தொடர்பில் நீண்ட காலமாகக் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்தாலும், இணைவுக்குரிய கால எல்லை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam