நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த ரணில்
சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு தன்னை அழைத்தமை சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை தொடர்பான பிரச்சினையை எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றம் கூடும் நாட்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆணைக்குழுவிற்கு அழைப்பது சம்பந்தமாக முன்னாள் பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆணைக்குழுவிற்கு வருமாறு அறிவிக்கப்பட்ட தினத்தில் தன்னால், வருகை தர முடியாது என்பதை சட்டத்தரணிகள் மூலம் அறிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கும் தேவை தனக்கு இருப்பதாகவும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேவையான சந்தர்ப்பங்களில் மாத்திரம் அழைக்குமாறும் ரணில் கோரியுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றம் கூடும் தினங்கள் சம்பந்தமாக நாடாளுமன்ற செயலாளர் ஊடாக ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.