பிரித்தானியர்களுக்கு தலையிடியான தமிழர்கள்! ரணிலின் புதிய இரகசிய நகர்வு (VIDEO)
பிரித்தானியர்களின் குடியேற்றவாதம் வீழ்ச்சியடைகின்ற நேரத்தில் தமிழர்களின் எழுச்சி பிரித்தானியர்களுக்கு தலையிடியாக மாறியுள்ளதாக பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் இந்தியாவின் பக்கம் சென்றதன் காரணமாகவே பிரித்தானியர்கள் தமிழர்களை ஓரங்கட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமர் இரட்டை பொருளாதார நெருக்கடி தொடர்பில் விளக்கமளித்துள்ள நிலையில், இலங்கையின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக டொனமூர் யாப்பினை பின்பற்றுமாறு தெரிவித்திருந்தார்.
அதாவது, இலங்கையின் டொனமூர் யாப்பு தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து தமிழர்களை ஓரங்கட்டும் யாப்பாகவே அமைந்துள்ளது. பெரும்பான்மையினருக்கு முழுமையாக இலங்கையின் இறைமையை கையளித்த யாப்பாகவே டொனமூர் கருதப்படுகின்றது.
டொனமூர் யாப்பு என்பது தமிழர்களை ஓரங்கட்டி தமிழர்களை அழிப்பதற்கான படுகுழியை தோன்றிய யாப்பாக டொனமூர் யாப்பு பார்க்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
