இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பில் ரணில் - அநுர உடன்படிக்கை: வெளிப்படுத்தும் சஜித்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் விருப்பு வாக்கு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனினும், முதல் சுற்றிலேயே தமது கட்சி வெற்றி பெறும் என்பதால், 2ஆவது விருப்புரிமை குறித்து தாம் கவலைப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதிக்கு கடவுச்சீட்டையோ அல்லது விசாவையோ வழங்க முடியாதுள்ளது. அத்துடன் அவரின் அரசாங்கத்தினால் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதுள்ளது என்றும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழல் ஒப்பந்தங்கள்
இந்நிலையில், அரசாங்கத்தின் ஊழல் ஒப்பந்தங்களே இந்தப் பிரச்சினைகளுக்கான காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, அநுரவுடன் இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்துமாறும், கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் நடைமுறைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்துமாறும் சஜித் பிரேமதாச, ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
அதேவேளை ரணில் மற்றும் அநுர ஆகியோரின் பெரும் சதியை முறியடிக்குமாறும் சஜித் பிரேமதாச வாக்காளர்களிடம் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |