தலதா மாளிகை வளாகத்தில் தேரர்கள் பேரணி: ஞானசார தேரரின் காவியுடை அகற்றல் விவகாரத்துக்கு தொடர் கண்டனம்
கலகொட அத்தே ஞானசார தேரரின் காவியுடையை அகற்றியதைக் கண்டித்தும், அவரை விடுவிக்கக் கோரியும் மகாசங்கம் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.
இந்த பேரணியானது, இன்று(10.10.2026) கண்டி - ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேரர்கள் முன்னெடுத்துள்ள பேரணி
பேரணி தொடங்குவதற்கு முன்னர் கண்டியில் உள்ள மகுல் மடுவாவில் ஒரு சிறப்பு ஆசி வழங்கும் விழாவும் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் கலந்துக் கொண்ட பேசிய உலப்பனே சுமங்கல தேரர் கருத்து தெரிவிக்கையில்,
ஞானசார தேரருக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள தன்னிச்சையான நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் வரியபொல ஸ்ரீ சுமங்கல தேரர் தேசத்தையும் சம்புத்த சாசனத்தையும் பாதுகாப்பதற்காகக் குரல் எழுப்பியதைப் போலவே, ஞானசார தேரரும் நாட்டின், தேசத்தின் மற்றும் சாசனத்தின் முன்னேற்றத்திற்காகக் குரல் எழுப்பியுள்ளார் என்று தேரர் சுட்டிக்காட்டினார்.
அநுர அரசாங்கத்தின் அடக்குமுறை
ஞானசார தேரர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்படவில்லை என்றும், மாறாக அவர் ஒட்டுமொத்த தேசத்திற்காகவும் சாசனத்திற்காகவும் தனது தண்டனையை அனுபவித்து வருகிறார் என்றும் சுமங்கல தேரர் கூறினார்.
மேலும், நிபந்தனையின்றி அவருக்காகக் குரல் கொடுப்பதும், அவரைத் தனியாக விட்டுவிடாமல் இருப்பதும் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் வரியபோலா சுமங்கல தேரரின் சிலை முன்பாகத் தொடங்கிய இந்தப் பேரணி, ஞானசார தேரர் சிறை வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கிச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அநுர அரசாங்கம் மேற்கொண்டு வரும் அடக்குமுறைக்கு எதிராக, வன்முறையற்ற முறையில் இந்தப் பேரணியில் மக்கள் அனைவரும் இணைய வேண்டும் என்றும், தேரர் விடுவிக்கப்படும் வரை அவர்கள் ஓயமாட்டார்கள் என்றும் உலாபனே சுமங்கல தேரர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.