கொழும்பு துறைமுக நகர விருந்தில் மோதல்! பலத்த வெட்டுக்காயங்களுடன் ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள தொழிலாளர்கள் விடுதிக்கு அருகில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு துறைமுக நகருக்கு வாடகை அடிப்படையில் பணிபுரிந்து வந்த பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலத்த வெட்டுக்காயங்கள்
நேற்றிரவு (09) ஊழியர்கள் விடுதிக்கு அருகில் இடம்பெற்ற விருந்தில் ஏற்பட்ட, வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலத்த வெட்டுக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.