யாழில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி
வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனஈர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியானது இன்றைய தினம் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்து கிட்டுப்பூங்கா வரை நடைபவனியாக சென்றது.
பின்னர் கிட்டுப் பூங்காவில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு மகளிர் தின நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன்போது மகளிர்களின் உரைகள் இடம்பெற்றுள்ளன.
வலியுறுத்தப்பட்ட வாசகங்கள்
இதன்போது "பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குக, பாலியல் குற்றங்களை துரிதமாக விசாரிக்க நடமாடும் நீதிமன்றங்களை உருவாக்குக, பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரச புலனாய்வாளர்கள் பின் தொடர்வது, தொலைபேசியில் அழைப்பது, புகைப்படம் எடுப்பது, விசாரணை செய்வதை உடன்நிறுத்துக" என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகள் பேரணியில் இடம்பிடித்திருந்தன.
இதில் யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான மகளிர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
