ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும்! ராஜிதவிடம் ரணில் உறுதி
உரிய வகையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித எண்ணமும் தன்னிடம் இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) என்னிடம் உறுதியாகக் கூறினார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் கூறியதாவது,
"ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் வினவினேன். ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித திட்டமும் இல்லை என்றும், தேர்தல் உரிய வகையில் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
அடுத்தது ஜனாதிபதியின் பதவிக் காலம் நீடிப்பு பற்றியும் தகவல்கள் வெளியாகின. அது பற்றியும் வினவினேன். அவ்வாறு எவ்வித திட்டம் இல்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வெற்றியோ, தோல்வியோ நிச்சயம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் பெரும்பாலானவர்கள் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
