மன்னார் - முருங்கன் பகுதியில் கோர விபத்து: வயோதிப பெண் ஒருவர் பலி
மன்னார்(Mannar) - மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதுடன் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவமானது இன்று (21.06.2024)மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
கல்முனையில் இருந்து மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்கு வருகை தந்தவர்களின் ஹயஸ் ரக வாகனம் முருங்கன், இசைமாலை தாழ்வு, நரிக்காடு வளைவு பகுதியில் உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த அனைவரும் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 7 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களில் வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, வாகனத்தில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறவினர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri