தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலை தொடர்பில் பிரித்தானிய பிரதான எதிர்க்கட்சியின் நிலைப்பாடு
தொழிலாளர் கட்சியின் தலைவர், 15 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று வழங்கிய அறிக்கையில் அந்த தினத்தை இனப்படுகொலையின் நினைவு நாள் என குறிப்பிட்டுள்ளதாக பிரித்தானிய தொழில் கட்சியின் தமிழ் பிரிவின் உறுப்பினர் வேந்தனா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவ்வாறான ஒரு தினத்தில் கவலையடைந்து தமது மனவருத்தத்தினை தெரிவிப்பதனை விட அந்த இனப்படுகொலைக்கான நீதியை பெற்றுக்கொள்ளவதற்கான வழியை அமைக்க வேண்டும் என தொழிலாளர் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளதாக வேந்தனா கூறியுள்ளார்.
அத்துடன், லேபர் கட்சி வெற்றிப்பெறுமாயின் தமக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என தொழிலாளர் கட்சியின் தலைவர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து வெளியேறப்போகும் பெரும் எண்ணிக்கையான மருத்துவர்கள்: எச்சரிக்கும் மருத்துவர் சங்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |