தமிழ் நாட்டில் மதுவால் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் வருமானம்
தமிழ் நாட்டில் கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத சாராயத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று தமிழக சட்டசபையில் மதுவிலக்கு துறை கொள்கை விளக்க குறிப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, 2023 - 2024 ஆம் ஆண்டில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 12,431 வழக்குகள் பதியப்பட்டு, 12,422 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபான வருவாய்
அத்துடன், 4,64,152 லிட்டர் சட்டவிரோத மதுபானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமிழ்நாட்டில் 2023 - 2024 ஆம் ஆண்டில் மதுபானத்தில் இருந்து வருமானம் 45,855.67 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்இது கடந்த ஆண்டைவிட 1,734.54 கோடி ரூபாய் கூடுதலாகும்.

இதற்கிடையில் 2022 - 2023ல் மதுபானம் மூலம் 44,121.13 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க பெற்றுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam