திரைமறைவு அரசியல் வேண்டாம்: ராஜபக்சர்களுக்கு அறிவுரை - செய்திகளின் தொகுப்பு (Video)
திரைமறைவில் இருந்து அரசியல் செய்வதை விட, பகிரங்கமான முறையில் அரசியல் செய்வது சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஸ்தாபித்தல் தொடர்பில் எதிர்வரும் வாரம் சாதகமான தீர்மானமொன்றை பெற்றுக்கொள்ள முடியும்.
பொருளாதாரத்தை சீர்குலைத்து அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தி, முழு நாட்டு மக்களையும் வீதிக்கிறக்கியுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச திரைமறைவில் இருந்துகொண்டு அரசியல் செய்கிறார்.
அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கும் செயற்பாட்டை பசில் ராஜபக்ச தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,