சிரந்தி தொடர்பான ஓய்வூதிய குற்றச்சாட்டை மறுத்த ராஜபக்சவின் அலுவலகம்
முன்னாள் முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்சவுக்கு அரச கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பௌத்த பிக்கு ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் மறுத்துள்ளது.
மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வலஹாஹெங்குனாவேவே தம்மரத்ன தேரர், முன்னாள் முதல் பெண்மணி பல ஓய்வூதியங்களையும் அரச கொடுப்பனவுகளையும் பெற்று வருவதாக அண்மையில் கூறியிருந்தார்.
உறுதிப்படுத்தப்படாத தகவல்
இந்தநிலையில் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம், தம்மரத்ன தேரர் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனவே இந்தக் கூற்றுக்களை நிராகரிக்கப்பதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |