சீர்குலையும் மகிந்தவின் திட்டங்கள்! அநுர தரப்பின் முடிவால் கவலையில் நாமல்
தன்னுடைய தந்தையான மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தின் போது கொண்டு வரப்பட்ட நாட்டுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்களை தற்போதைய அரசாங்கம் அரசியல் நோக்கங்களுக்காக சீர்குலைத்துள்ளதாக பொதுஜய பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் குறுகிய நோக்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது.

எனது தந்தை தொழிலாளர் அமைச்சராக இருந்தபோது தொழிலாளர்களின் நலனுக்காக தொடங்கிய நிதியத்தினை மூடுவதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள முடிவானது முட்டாள்த்தனமானதாகும். இது நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும்.
குறித்த நிதியம், நட்டத்தை ஏற்படுத்துவதாக தவறான தகவல்களை பரப்பி, அது மூடப்படுகின்றது. இதற்கு நான் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிடுகின்றேன்.
ராஜபக்சக்களால் உருவாக்கப்பட்ட இத்தகைய தேசிய வளங்களை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதற்குப் பதிலாக, அரசாங்கத்திலுள்ள அரசியல்வாதிகளின் குறுகிய நோக்கங்களால் அவற்றை கலைப்பது துரதிர்ஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO