யாழில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவன் - சடலத்துடன் வீதியில் போராடிய உறவுகள்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான சிறுவனின் சடலமானது வழுக்கையாறு இந்து மயானத்தில் சற்றுமுன்னர் புதைக்கப்பட்டுள்ளது.


முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதிக்கோரி சடலத்துடன் உறவுகள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி செலுத்தி சென்ற வாகனத்தின் மீது நேற்று முன் தினம்(10.02.2026) பொலிஸார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டிருந்தனர்.
பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி போராட்டம்
இந்த சம்பவத்தில் காயமடைந்த வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இந்நிலையில், சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சடலத்துடன் வீதியில் போராடியுள்ளனர்.
இறுதிக்கிரியைகள்
அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப்படுகொவை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.
அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து "பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது உடலம் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது.






சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam