ராஜபக்ச குடும்பத்திற்குள் பிளவு - ரணிலின் கைதால் அம்பலமான குடும்ப மோதல்
ராஜபக்ச குடும்பத்தின் கட்சியான பொதுஜன பெரமுன கட்சி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றுவதற்காக அணி திரண்ட நிலையில் தங்கள் குடும்ப உறுப்பினரை மறந்துள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை நலன் விசாரிக்க ஒருவர் கூட சிறைச்சாலைக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது.
ராஜபக்ச குடும்பம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்சவின் மகனான சஷீந்திர ராஜபக்ச நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் முதல் ஜனாதிபதி பதவிக் காலத்தில் அவர் முதலில் அரசியலில் ஈடுபட்டார். நமல் ராஜபக்ச அரசியலில் ஈடுபட்ட பிறகு, சஷீந்திர ராஜபக்சவுக்கு 'மாற்றாந்தாய் பராமரிப்பு' வழங்கப்பட்டது.
ராஜபக்ச குடும்பமும் பொதுஜன பெரமுன கட்சியும் ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றும் பணியில் இணைந்து செயற்பட்டனர்.
சமல் ராஜபக்சவும் ராஜபக்ச குடும்பத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளார் என்பது சமீபத்திய செயல்பாடுகளில் தெரியவந்துள்ளதென தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஊழல் மோசடி
சஷீந்திர ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டு வருவதற்காக மகிந்த ராஜபக்ச கோயில்கள், தேவாலாயங்கள் மற்றும் கிராமங்கள் சட்டத்தை கூட மாற்றினார். அதன் பிறகு, ராஜபக்ச குடும்ப விவகாரங்களுக்காக கரிம உரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பான அனைத்து பொறுப்புகளும் சஷீந்திர ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதன்போது பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக சஷீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மகாவலி நிலத்தில் கட்டப்பட்ட தனது அரசியல் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் அழித்ததாக போலியாக தெரிவித்து, அதற்காக 8,850,000 ரூபா அரச நிதியை நட்டஈடாக பெற்றுக்கொண்டதாக சஷீந்திர ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
