இலங்கையில் சிறுவர்கள் திறன்பேசி பயன்படுத்துவதற்கு தடை!
இலங்கையில் சிறுவர்கள் திறன்பேசிகள் அல்லது ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதனை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பயன்படுத்துவதற்கு தடை
பன்னிரெண்டு வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் திறன்பேசி பயன்படுத்துவதனை தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அது குறித்த திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் சரோஜினி போல்ராஜ் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
12 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருப்பதனையும், பயன்படுத்துவதனையும் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் ஏற்கனவே திறன்பேசிகளை சிறுவர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri