எதிர்க்கட்சிகளை கண்டு தலைத்தெறிக்க ஓடும் மக்கள் - ரணிலுக்கு தொடரும் ஏமாற்றம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் இருந்து மக்களை கொழும்புக்கு அழைத்து வரும் இரகசிய ஏற்பாட்டினை எதிர்க்கட்சியினர் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் இந்த முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்க மறுப்பதாக அரச தரப்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மக்களின் ஆதரவு
தமக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களை பேருந்துகளில் ஏற்றி வர எதிர்க்கட்சியினர் கடும் பிரயத்தனத்தை மேற்கொள்கின்றனர்.
அதற்கமைய பேருந்துகளில் மிகவும் குறைவான மக்களே உள்ளதாகவும், சில பேருந்துகளில் எட்டு வரையிலான பேர் மட்டுமே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குற்றச்செயலில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும், அதற்கமைய மக்களின் ஆதரவு கிடைத்து வருவதாகவும் அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் பாரபட்சம் இன்றி அனைத்து தரப்பினர் மீது சட்டம் பாயும் என அநுர அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



