ரணிலின் தற்போதைய உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை ஆக முடியாத நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதியை நேரில் சென்று பார்த்தேன். அவரது உடல்நிலை காரணமாக நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என்று நினைக்கிறேன்.
ஆனால் வழக்கறிஞர்கள் அங்கு இருப்பார்கள். அவரது நலம் பார்க்கச் சென்றேன். நான் அரசியல் பற்றிப் பேசவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் உடல்நிலை
நேற்று மதியம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து நலம் விசாரித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய எஸ்.எம். மரிக்கார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு மீதான விசாரணை இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



