தொடர் சர்ச்சைகள் - விகாரையிலிருந்து வெளியேற்றப்பட்ட தேரர்
ராஜாங்கனை சத்தாரதன தேரர், தான் தங்கியிருந்த விகாரை மற்றும் தனது தனிப்பட்ட பொருட்களையும் கைவிட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சத்தாரதன தேரரை மகாசங்கத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மகா சங்க சபை எடுத்ததைத்தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த முடிவை அவர் மேற்கொண்டுள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு எதிராக கருத்து
விகாரையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, சத்தாரதன தேரர் தனது ஆதரவாளர்களை விகாரைக்கு அழைத்து தான் விகாரையில் இருந்து வெளியேறப்போகும் விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் தனது தனிப்பட்ட உடைமைகள் உள்ளிட்ட அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து அவர் வெளியேறி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் மாறு செய்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய முறையில் சத்தாரதன தேரர் கருத்து வெளியிட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறான பின்னணியில் முதலில் மகா சங்கத்தில் இருந்தும் தற்போது தான் தங்கியிருந்த விகாரையை விட்டும் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam