பிரித்தானிய கோடீஸ்வரர் வழங்கிய 8 கோடி ரூபாய் மாயம் - சர்ச்சைக்குரிய தேரரிடம் தீவிர விசாரணை
இராஜாங்கனை சத்தாரதன தேரருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் உள்ள கோடீஸ்வரரால் விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்ட 8 கோடி ரூபாய் வங்கி கணக்கில் வைக்கப்பட்ட நிலையில் அது காணாமல் போயுள்ளது.
சத்தாரதன தேரர் யூடியூப் செயற்பாட்டாளர் மற்றும் தொலைக்காட்சி பிரமுகர் ஒருவருடன் இணைந்து விகாரை நிர்மாணத்திற்காக இந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் இதுவரை விகாரை நிர்மாணிக்கப்படவில்லை எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேரரின் வங்கிக் கணக்கை பரிசோதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக இராஜாங்கனை சத்தாரதன தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்டுபத்தப்பட்டார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால், அவர் அநுராதபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam