அநுராதபுரத்திற்கு வந்து தவழ்ந்த கூட்டம்! பணத்தை பெற்றுக்கொண்டு மனதிலிருந்து வந்த வார்த்தை - ஈரோஸ் கட்சி விசனம்
முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க விரைவில் மருந்து கட்டுவேன் என ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அநுர அரசாங்கம் 20 வருடம் நிலைத்து நின்று ஆட்சி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்றைய தினம் (14.09.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான கூட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கொலை, கொள்ளை, குடிகாரர்கள் தான் இருக்கின்றனர் என உலகத்துக்கே தெரிந்துள்ளது.

இருந்தபோதும் அரசாங்கத்துக்கு எதிராக அநுராதபுரத்தில் பெரிய ஒரு கூட்டம் நடந்தது அந்த கூட்டத்திற்கு சென்றவர்கள் அனைவரும் வீதியில் தவழ்ந்ததை முகநூலில் பார்த்திருப்பீர்கள்.
பணத்தையும், மதுபானத்தையும் வாங்குவதற்கு அனுர ஹொரா என சொல்வது கடமை, ஏன் என்றால் பணத்தையும் மதுபானத்தையும் பெற்றுக் கொண்டதற்காக.
ஆனால் அடிமனதில் இருந்து நாமல் ஹொரா என சொல்லியிருந்தனர். இது தான் நிலைமை இலங்கையில் இவ்வளவு பேரும் தான் அனைத்து கட்சிக்கும் ஆதரவாளர்கள் என்பது ஊடகங்கள் மூலம் தெரிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.