இத்தாலியில் பெண்ணை கொடூரமாக தாக்கிய இலங்கை இளைஞனை துரத்தி பிடித்த பொலிஸ்
இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் Vicolo Fossetto பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இலங்கையர் அலுமாரிகளில் இருந்த பல மதுபானப் போத்தல்களை எடுத்து தனது பைக்குள் மறைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண் மீது தாக்குதல்
பணம் செலுத்தாமல் காசாளர் பகுதியைக் கடந்து வெளியேறும் பகுதியை நோக்கிச் சென்றுள்ளார். ஊழியர் ஒருவர் அவரை அணுகி திருடப்பட்ட பொருட்களைத் திருப்பி தருமாறு கோரியுள்ளார். எனினும் அவர் ஊழியரை உடல் ரீதியாக தாக்கியுள்ளார்.

ஊழியரை கீழே தள்ளியதோடு, திருடப்பட்ட பொருட்களுடன் இலங்கையர் தப்பியோடியுள்ளார்.
கீழே விழுந்த பெண் எழுந்து, தனக்கு உதவ நின்ற வாடிக்கையாளர் ஒருவரின் காரில் இலங்கையரை துரத்தத் தொடங்கினார்.
அங்கு வசிப்பவர் ஒருவர் சந்தேக நபரை அடையாளம் கண்டு, சந்தேக நபர் எங்கு பதுங்கியிருக்கின்றார் என்பதை அதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத குடியேற்றவாசி
சோதனையின் போது, பையில் திருடப்பட்ட இரண்டு மதுபானப் போத்தல்களைக் கண்டெடுத்தனர். தப்பியோடும்போது கைவிடப்பட்ட மூன்றாவது மதுபான போத்தல் அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

இந்நிலையில் விற்பனை செய்யக்கூடிய நிலையில் இருந்த அனைத்துப் பொருட்களும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
விசாரணையை தொடர்ந்து பல குற்றப் பின்னணியை கொண்டவரும் சட்டவிரோதமான குடியேற்றவாசியுமான இலங்கையர் கைது செய்யப்பட்டார்.