திருகோணமலையில் காற்றுடன் கூடிய மழை: வீடுகள் பகுதியளவில் சேதம்
திருகோணமலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக பல தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாக வெருகல் - ஊப்பூரல் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆறு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்துள்ளார்.
சேதங்கள் தொடர்பான தகவல்கள்
மேலதிக சேதங்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் திருகோணமலை நகரை அண்மித்த கன்னியா - பீலியடி பகுதி உட்பட பல பகுதிகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளததன் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வடிகான் அமைக்கப்படாததன் காரணமாக வெள்ள நீர் வீட்டுக்குள் புகுந்துள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam