ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை விரைவுபடுத்தி வருவதாக ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர தேசிய அடையாள அட்டைகளை வழங்கத் எதிர்பார்ப்பதாக திணைக்களத்தின் தலைமை பணிப்பாளர் ஜகத் ஹெரத் கூறியுள்ளார்.
அடையாள அட்டைகளை தயாரிப்பதற்கான விண்ணப்பம் கோரல்
மேலும், சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை தயாரிப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சகம் மூலம் அனைத்துப் பாடசாலைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர்கள் விண்ணப்பங்களைத் தாமதமின்றி ஆட்கள் பதிவு திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை எழுதவிருக்கும், மற்றும் சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பித்து இன்னும் பெறாத மாணவர்கள், திணைக்களத்தின் இணையதளத்தில் உள்ள தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகள் மூலம் துறைக்கு தெரிவித்து தங்கள் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam