யாழ். நல்லூர் ஆலய கந்தசஷ்டி உற்சவம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் கந்தசஷ்டி விரதம் உலகின் பல பாகங்களிலும் உள்ள முருகன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் இடம்பெறுவது வழக்கம்.
இவ்வகையில்,வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் பதியுறை நல்லைக் குமரன் ஆலயத்திலும் கந்தசஷ்டி உற்சவம் 5 நாட்களும் பக்திபூர்வமாக உற்சவம் நடைபெறவுள்ளது.
2023 சோபகிருது வருடத்திற்கான கந்தஷஷ்டி விரதமானது நாளைய தினம் (14.11.2023) ஆரம்பமாகி எதிர்வரும் சனிக்கிழமை (18.11.2023) நிறைவடைகிறது.
கந்தசஷ்டி உற்சவம்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலே நாளை ஆரம்பமாகும் கந்தசஷ்டி உற்சவம் ஆறு காலப்பூஜைகளுடன் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் சனிக்கிழமை (18.11.2023) சூரசம்ஹார உற்சவம் நடைபெறவுள்ளதுடன் மறுநாள் (19.11.2023) எம்பெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெற்று கந்தசஷ்டி உற்சவம் இனிதே நிறைவு காணவுள்ளது.
இந்நிலையில், கந்தசஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.
எனவே, குறித்த வீதியால் பயணிப்போர் மாற்று வீதி ஊடாக தமது பயணங்களை மேற்கொள்ளுமாறு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 19 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
