யாழ். நல்லூர் ஆலய வீதிகளுக்கு தடை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.
கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் தடை போடப்பட்டுள்தாக யாழ். மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வீதி தடை
இதனால், ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் செவ்வாய்க்கிழமை (14.11.2023) முதல் வெள்ளிக்கிழமை வரையில் மாலை 5 மணி முதல் 06 மணி வரையிலான ஒரு மணி நேரமும், சனிக்கிழமை சூரன் போர் அன்று மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணி முதல் 06 மணி வரையிலும் வீதி தடை போடப்பட்டு வீதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே வீதியால் பயணிப்போர் மாற்று வீதி ஊடாக தமது பயணங்களை மேற்கொள்ளுமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
